இன நல்லிணக்கத்தை தோற்றுவிப்பதில் சமயங்களின் வகிபாகம் என்ற தலைப்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று 05/03/2024 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை தாருல் ஈமான் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம வளவாளராக களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் வல்பொல ராகுல பௌத்த கொள்கைகளுக்கான நிறுவனத்தின் பணிப்பாளருமான கல்கண்தே தம்மானந்த தேரர் அவர்கள் கலந்து கொண்டதோடு இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள தடைகள், அதனை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் வாய்ப்புகள் பற்றி கருத்துக்களைப் பரிமாறினார். இதில் ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த அங்கத்தவர்கள் மற்றும் நல்லிணக்க ஆர்வலர்கள் ஆண்கள் பெண்கள் பலரும் கலந்துகொண்டனர்.