75th Independence Day – Message

சுதந்திர தினச் செய்தி

இலங்கை சுதந்திரம் பெற்றதன் 75 ஆவது ஆண்டு (04.02.2023) நிறைவைக் கொண்டாடும் இத்தருணத்தில் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நின்று சுதந்திரத்துக்காகவும் நாட்டின் அபிவிருத்திக்காகவும் பாடுபட்ட தேசியத் தலைவர்களை நினைவு கூர்வது நம் அனைவர்களதும் கடமையாகும்.

முன்னெப்போதுமில்லாத வகையில் நாட்டு மக்கள் அவநம்பிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சுதந்திர தினம் எம்மை வந்தடைந்துள்ளது. சுதந்திரத்துக்கு முன்னைய குடியேற்ற நாட்டு ஆட்சியின் போது நாட்டின் அபிவிருத்தி, சுதந்திரம், எதிர்காலம் என்பன தொடர்பாகக் காணப்பட்ட அவநம்பிக்கைக்கு ஒரு நியாயம் இருந்தது. அந்நிய நாட்டவர்கள் பற்றிய அதிருப்தி எமது நாட்டைத் தம் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்வது அவ நம்பிக்கைக்கு காரணமாக அமைந்ததெனலாம். சுதந்திரம் கிடைத்த புதிதில் நாடு அபிவிருத்தி அடையும், சகல இனங்களும் சுபீட்சத்துடன் வாழ முடியும் என்ற நம்பிக்கை தோன்றியது. சிறிது காலத்திலேயே அந்த நம்பிக்கை படிப்படியாகத் தோய்வடையத் தொடங்கியது. இன்று மக்களுக்கு அரசாங்கத்தின் மீதோ நாட்டின் எதிர்காலத்தின் மீதோ நம்பிக்கையில்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது. தமது பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம், தொழில்வாய்ப்பு, நல்லிணக்கம், பொருளாதார விருத்தி சட்டத்தின் ஆட்சி, உயிர் வாழும் உரிமை என்ற அனைத்திலும் ஒரு அவநம்பிக்கையையே நிலவுகிறது.

அனைவரும் ஒன்றிணைவதால் நல்லிணக்கம் ஏற்படும் என்று வார்த்தையில் கூறுவதேயன்றி அதனை நிஜ வாழ்வில் காணும் சூழல் இல்லை. ஒரு சுதந்திர நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்கு இந்நிலை பெரும் சவாலாகவே அமையும்.

மக்களின் நம்பிக்கையை வென்ற அரசும் அரசின் பால் பூரண நம்பிக்கை வைத்துள்ள மக்களும் இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் நாட்டு அபிவிருத்தியின் இன்றியமையாத அம்சங்களாகும். எதிர்காலம் பற்றிய சந்தேகத்தில் வாழும் மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் அபிவிருத்தியை எதிர்பாக்க முடியாது. எனவே சகல பிரிவினரிடையும் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப இந்த சுதந்திர தினத்தில் நாம் திடசங்கர்ப்பம் பூணுவோம். இலங்கையர் அனைவருக்கும் எமது சுதந்திர தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

 

அஷ்ஷெய்க். எம்.எச்.எம். உஸைர் (இஸ்லாஹி)
தலைவர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

 

 

නිදහස් දින පණිවුඩය

ශ්‍රී ලංකාව නිදහස ලැබූ 75 වැනි සංවත්සරය (04.02.2023) සමරන මෙම අවස්ථාවේ ජාති, ආගම්, භාෂා භේද නොතකා දේශයේ නිදහස වෙනුවෙන් හා සංවර්ධනය වෙනුවෙන් දායක වූ ජාතික නායකයින් සිහිපත් කිරීම අප කාගේත් යුතුකමකි.

වෙන කිසි දිනකට වඩා රටේ ජනතාව අවිශ්වාසයෙන් පෙළෙන මොහොතක මෙම නිදහස් සැමරුම අප වෙත ලඟාවී ඇත. නිදහසට පෙර යටත් විජිත පාලනය යටතේ දේශයේ සංවර්ධනය, නිදහස් පාලනය, අනාගතය පිළිබඳ අවිශ්වාසයකින් පසුවීමට හේතුවක් තිබුණි. යටත් විජිත පාලනය හෙළා දැකීම එම හේතුව විය හැකිය. නිදහස ලැබූ කාලයේ කඩිනමින් රට සංවර්ධනය කරා ගොස් සියළු ජාතීක් සෞභාග්‍යයෙන් යුතුව ජීවත් විය හැකි යැයි අපේක්ෂා කල ද එම අපේක්ෂාව කෙටි කාලයකින් ක්‍ෂයවී ගියේය. වර්තමානය දෙස බලන විට ජනතාවට රජය කෙරෙහි හෝ රටේ සංවර්ධනය කෙරෙහි හෝ විශ්වාසයයක් නොමැති තත්තවයක් උදාවී ඇත. තම දරුවන්ගේ අධ්‍යාපනය, අනාගතය, රැකියා අවස්ථා, ජාතීන් අතර සංහිඳියාව, නීතියේ ආධිපත්‍යය, ජීවත්වීමේ අයිතිය ඇතුළු සියලු අංශ කෙරෙහිම අවිනිශ්චිත භාවයක් පෙනේ.

සියළු ජාතීන් එක්වී සංහිඳියාවෙන් ජීවත්විය යුතුය යනුවෙන් ශබ්ද නඟා කීවද එය යතාර්ථයක් කරගැනීමට නොහැකිවී ඇත. නිදහස් රටක තිරසාර සංවර්ධනයට මෙය විශාල අභියෝගයකි.

ජනතාවගේ විශ්වාසය දිනාගත් රජයක් හා රජය කෙරෙහි පුර්ණ විශ්වාසය තබන ජනතාවත් සහ ශ්‍රී ලංකාව කෙරෙහි ජාත්‍යන්තර විශ්වාසයත් ජාතික සංවර්ධනයට නැතුවම බැරි තත්තවයකි. අනාගතය පිළිබඳ සැකයෙන්, අවිශ්වාසයෙන් ජීවත්වන ජනතාවකින් යුත් රටක සංවර්ධනයක් බලාපොරොත්තු විය නොහැකිය.

එමනිසා සියළු පාර්ශවයන් අතර විශ්වාසය ගොඩනැගීමට මෙම නිදහස් දිනයේ අධිෂ්ඨාන කරගනිමු. සියළු ශ්‍රී ලාංකිකයන්ට උදාර නිදහස් දිනයක් වේවායි ප්‍රාර්ථනා කරමු.

 

අෂ්ෂෙයික් එම්.එච්.එම්. උසෛර් (ඉස්ලාහි)
සභාපති
ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top