76 ஆவது சுதந்திர தின வாழ்த்துக்கள்
எமது நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். சுதந்திரத்தின் அருமை பெருமைகளை ஆண்டுதோறும் நினைவு படுத்துகின்றோம். எமது நாடு அதன் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பல சாதனைகளை புரிந்துள்ளது. இலவச கல்வி, இலவச சுகாதார சேவை, சர்வசன வாக்குரிமை, ஜனநாயக ஆட்சி முறை, அணிசேரா கொள்கை. அதிகார பரவலாக்கம்… என சமூக தளத்தில் பல முற்போக்கான அம்சங்கள் சுதந்திரத்தால் சாத்தியமாகியுள்ளது.
எனினும் பிரச்சினைக்குரிய விவகாரங்கள் பெருமைக்குரிய விவகாரங்களை பின்னோக்கி தள்ளுகின்றன. தோல்வியடைந்த நாடுகளுக்கு முன்னுதாரணமாக கூறப்படும் நாடுகளில் ஒன்றாக எமது நாடு மாறிவிட்டது.
புத்திஜீவிகளின் வெளியேற்றமும் முதலீட்டாளர்களின் அச்சமும் கூர்மைப்படுத்தப்படும் இனவாதமும் சட்ட, நிர்வாகத்துறைகளில் நடைபெறும் அசமந்தப் போக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளை தகர்த்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 75 வருடங்களாக நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்கள் எதிர்பார்ப்புகளுடன் கட்சிகளையும் தலைவர்களையும் மாற்றி மாற்றி பரிச்சார்த்தம் செய்ததில் தோல்வியடைந்து விட்டதாகவே கருதுகின்றனர்.
மக்களே மக்களை ஆள வேண்டிய ஜனநாயக நாட்டில் மக்களை கலந்தாலோசிக்காமலேயே மக்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்படுவதையும் அது அவர்கள் மீதே திணிக்கப்படுவதையும் பார்த்த மக்கள் தங்களைத் தாங்களே தூற்றிக் கொள்கின்றனர்.
தனியார்துறையின் ஏகபோகத்தை கட்டுப்படுத்தவும் இலாப நோக்கத்தை மட்டுப்படுத்தவும் கொண்டுவரப்பட்டதே அரச துறை நிறுவனங்களாகும். அவை இன்று நஷ்டத்தை உருவாக்கும் நிறுவனங்களாக மாற்றப்பட்டு தனியார் துறைக்கு படிப்படியாக தாரை வார்க்கப்படுகிறது. நம் இயற்கை வளங்களும் இதர வளங்களும் நம் நாட்டு மக்களின் நலங்களுக்காக பயன்படுத்தப்படாமல் தனி நபர்களாலும் வெளிநாடுகளாலும் சூறையாடப்படுகிறது.
நமக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உலக வங்கியும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் தீர்மானம் எடுக்கிறன. இவற்றையெல்லாம் காணும் மக்கள் நமது சுதந்திரத்தில் சந்தேகம் கொள்கின்றனர்.
76 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூறும் இவ்வேளையில் எம் தேசத்தின் மையப் பிரச்சினைகளின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும். சுயநலத்தையும் சுரண்டலையும் இலக்காக கொண்ட வல்லரசுகளின் பிடியிலேயே நமது நாடு இன்னும் சிக்கியிருக்கிறது. பதவி மோகத்தையும் ஏமாற்றுதல்களையும் பண்பாகக் கொண்டவர்களே தேசிய அரசியலை மாறி மாறி கையாளுகின்றனர். நமது நாட்டின் சிவில் சமூகம் பலவீனம் அடைந்து காணப்படுகின்றது. எமது மக்கள் அறியாமை, வறுமை. பினி என பல சமூக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எமது மக்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொண்டால் எமது சிவில் சமூகம் பலம் பெற்றால் எமது நாடு பாதுகாக்கப்படும் இனிவரும் சுதந்திர தினங்களாவது அர்த்தமுள்ளதாக மாறும்.
அஷ்ஷேய்க். M.H.M. உஸைர் இஸ்லாஹி
தலைவர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
76 වෙනි නිදහස් දින පණිවිඩය
අප මව්බිම 76 වෙනි නිදහස සමරණ මෙම අවස්ථාවේ නිදහස් දින සුබ පැතුම් ඉදිරිපත් කිරීමට ලැබීමෙන් සතුටට පත්වෙමු. නිදහසේ උදාරත්වයේ වටිනාකම වර්ෂයක් පාසා සිහිපත් කරමු. අපේ රටේ නිදහස් අරගල කාලවකවානුවේ සිටම බොහෝ ජයග්රහණයන් ලබාගෙන ඇත්තෙමු. නිදහස් අධ්යාපනය, නිදහස් සෞඛ්ය සේවය, සර්වජන ඡන්දය, ප්රජාතන්ත්රවාදී ආණ්ඩුක්රමය, නොබැදි ප්රතිපත්තිය, බලය විමධ්යගත කිරීම… ආදී වශයෙන් සමාජ තලයේ බොහෝ ප්රගතිශීලී කරුණු සාධනය කරගැනීමට හැකිවී ඇත.
එහෙත්, ගැටළු සහගත කරුණු ප්රශංසා සහගත කරුණු පසෙකලා ඉදිරියට පැමිණ ඇත. පරාජිත රටකට ආදර්ශයක් වන තරමට අපේ රටේ කීර්ති නාමය පලුදු වී ඇත.
උගතුන් රට හැර යාම, ආයෝජකයින් බියට පත්වීම, තියුණුවන ජාතිවාදය හා පරිපාලන ක්ෂෙත්රයේ දක්නට ලැබෙන උදාසීන ස්වභාවය… අනාගතය පිළිබඳ බලාපොරුත්තු වලට පහරක් වී ඇත.
ඉකුත් වසර 75 ක් තිස්සේ පැවැත්වූ එක් එක් මැතිවරණවලදී ජනතාව මහත් අපේක්ෂාවෙන් දේශපාලන පක්ෂ හා නායකයින් මාරුවෙන් මාරුවට අත්හදා බැලීමේදී තමන් විශාල පරාජයට පත් වී ඇති බවට අනාවරණය කරගෙන ඇත.
ජනතාව විසින් ජනතාව පාලනය විය යුතු ප්රජාතන්ත්රවාදී රටක ජනතාවගේ කැමැත්ත නොලබාම ජනතාවට විරුද්ධ තීරණ ගැනීමත් ඒවා ජනතාව මත බලෙන් පටවනු ලැබීමත් අත්විඳින ජනයා තමන්ම තමාටම දොස් පවරා ගනිති.
පුද්ගලික අංශයේ ඒකාධිකාරිත්වය පාලනය කිරීමටත්, ලාභ ප්රතිශතය සාධාරණය කිරීමටත් රාජ්ය ව්යවසායකත්වය හඳුන්වා දෙන ලදී. වර්තමානය වන විට ඒවායින් සිදුවෙන විශාල පාඩු ජනතාව මත පැටවී ඇත. එහි ප්රතිඵලයක් වශයෙන් ඒවා පුද්ගලික අංශයට විකුණා දැමීමේ වෑයමක් පවතී. අප රටේ ස්වාභාවික සම්පත් හා අනෙකුත් සම්පත් ජනයාගෙන් ගිලිහී තනි පුද්ගලයින්ගේ හා විදේශ රටවල සූරා කෑමට ලක්වෙමින් පවතී.
අප කළ යුත්තේ කුමක් ද? යන්න පිළිබඳ අපට අණ දෙන්නේ ලෝක බැංකුව සහ අන්තර්ජාතික මූල්ය ආයතනයන්ය. මේවා දකින ජනයා අප ලබාගත් නිදහස පිළිබඳ සැක මතුකරති.
76 වෙනි නිදහස් දිනය සමරන මෙම මොහොතේදී අප රටේ මූලික ගැටළු පිළිබඳ අවධානය යොමුකළ යුතුය. ආත්මාර්ථකාමිත්වය හා සූරාකෑම අරමුණුකරගත් මහ බලවතුන්ගේ ග්රහණයෙන් තවම අප රට මිදී නොමැත. බල ලෝභය හා රැවටිල්ල අරමුණු කරගත් පිරිසක් මාරුවෙන් මාරුවට ජාතික දේශපාලනය හසුරුවන තත්වයක් පවතී. සිවිල් සමාජය දුර්වල තත්වයට පත්වී ඇත. අපේ ජනතාවද නොදැනුවත්කම, දරිද්රතාවය වැනි රෝගවලට ගොදුරුවී ජීවත්වෙති.
ජනතාව බලවත් වන්නේ අපගේ සිවිල් සමාජය බලවත් වූ විට පමණයි. එවිට රට අභිමානවත් රටක් වශයෙන් පත් වෙනු නිසැකය. අනාගත නිදහස් සැමරුම් මෙයට වඩා අර්ථවත් කිරීමට අධිෂ්ඨාන කර ගනිමු.
එම්.එච්.එම්. උසෛර් ඉස්ලාහි
සභාපති
ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි