Media Release (07 April 2021)

ஊடக அறிக்கை

 

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தொடர்பில் உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றதும் ஆதாரமற்றவை யுமாகும். அவற்றை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி நிராகரிக்கிறது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி 1954ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சமய இயக்கமாகும். 1958ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட அதன் யாப்பின் ஷரத்து 1 (அ) வின்படி இலங்கை நாட்டினதும் இவ்வமைப்பினதும் யாப்புகளுக்கு உடன்படும் வகையில் தனது அங்கத்தவர்களுக்கும் அபிமானிகளுக்கும் நலன்புரி சேவைகளை வழங்குவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஓர் அமைப்பு என்ற வகையில் உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் அதன் பக்க நியாயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் அளிக்கப்படாமை இயற்கை நீதியின் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்த செயற்பாடாகும். இந்நிலையில்ஒரு பிரதான முஸ்லிம் சிவில் சமூக அமைப்பான இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியை தடைசெய்ய வேண்டுமென உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக் குழு கோரியிருப்பதையிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறது.

 எந்தத் தரப்பின் செயற்பாடு இந்த சட்டமூலத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறதோ அல்லது ஏதாவதொரு விதத்திலாவது சம்பந்தப்படுத்தப்படுகிறதோ அத்தரப்பினர் தம்மைப் பிரதிநிதித்துவப் படுத்தவும் அத்தரப்பினரின் பக்க நியாயங்களைக் கேட்டறியவும் வாய்ப்பளிக்கப்படல் வேண்டும்” என விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டமூலத்தின் 16ஆவது பிரிவு குறிப்பிடுகின்றபோதும் உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க ஆஜராகுமாறு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிக்கு எத்தகையும் ஆணையும் அனுப்பப்படவில்லை. எனவேவிசாரணை ஆணைக் குழுக்கள் சட்டமூலத்தின் 16ஆவது பிரிவுக்கேற்ப உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக் குழு செயலாற்றவில்லை என்பதை ஆழ்ந்த கவலையுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிக்க விரும்புகிறது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி குறிப்பிடத்தக்களவிலான ஆயுதங்களை தன்வசம் வைத்துள்ளதாகவும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வந்த தெரிவுசெய்யப்பட்ட சுமார் 150 முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துள்ளதாகவும் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களை குறிப்பிட்டுள்ளது.

ஆணைக்குழு இக்குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் தன்னோடு இணைக்கப்பட்ட CID அலகிலிருந்து ஒரு குழுவை அனுப்பி குறித்த அந்த ஆயுதங்களைக் கைப்பற்றி அந்த ஆயுதங்களையும் அவற்றை வைத்திருந்தவர்களையும் ஆணைக் குழுவின் முன் கொண்டு வந்திருக்கலாம். இந்த அடிப்படையற்றஆதாரமற்ற குற்றச்சாட்டு முற்று முழுதாக உண்மைக்குப் புறம்பானது என்பதுடன் அதனை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி முற்றாக மறுக்கிறது.

இது போன்ற முன்மொழிவுகள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிஅதனுடன் இணைந்த ஒரு சுயாதீன அமைப்பான ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் ஆகியோர் பற்றி ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏனைய விடயங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றன.

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் யாப்பை மீறி அதன் உறுப்பினர்களிடையே பிளவை ஏற்படுத்தியமையின் காரணமாக அவ்வமைப்பிலிருந்து ஒருவர் வெளியேற்றப்பட்டார். அவர் பின்னாட்களில் மாவனல்லை புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். குறித்த அந்த நபர் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்திலிருந்து ஏலவே விலக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உரிய பெறுமானம் வழங்கப்படாமையை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஆச்சரியமாக நோக்குகிறது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினராக இருந்த அவரது தந்தையும் இதே போன்றதொரு காரணத்திற்காக மாவனல்லை புத்தர் சிலை சேதப்படுத்தல் விவகாரத்துக்கு முன்னரே இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். அப்போது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக இருந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களது ஆலோசனையின் பேரிலேயே அவரது உடன் பிறந்த சகோதரரான அவர் விலக்கப்பட்டார்.

இலங்கை நாட்டினதும் இவ்வமைப்பினதும் யாப்புகளை மீறி செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினாலும்  அதன் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களினாலும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினாலும் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் அவ்வமைப்புகளின் முன்னுதாரண செயற்பாடுகளுக்கு சிறந்த சான்றுகளாகும்.

வன்மையான கண்டனத்துக்குரிய புத்தர் சிலை சேதப்படுத்தல் விவகாரம் தொடர்பில் ஓர் இஸ்லாமிய அமைப்பு என்ற வகையில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பின்வரும் குர்ஆன் வசனத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறது. “அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.” (ஸூரதுல் அன்ஆம்: 108) இந்த அல்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் மற்றவர்கள் வணங்குபவற்றைசிலைகளை சேதப் படுத்துவதைஅவற்றை அழிப்பதை இஸ்லாம் கண்டிப்பாக தடைசெய்திருக்கின்றமை தெளிவாகிறது.

2018 டிஸம்பர் புத்தர் சிலை சேதப்படுத்தல் விவகாரத்தையும் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மிகவும் வன்மையாக கண்டித்தது. அவை இஸ்லாத்துக்கு முரணானமனிதாபிமானமற்றமிலேச்சத்தனமானகுரூரமான நடவடிக்கைகள் என்பதே இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுதியான நிலைப்பாடாகும்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மீது சுமத்தப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கான விரிவான பதிலை மிக விரைவில் வெளியிடுவோம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

2021 மார்ச் 23ஆம் திகதிய Island நாளிதழில் “Govt. initiatives to counter extremism can become counterproductive” எனும் தலைப்பில் வெளியான செய்திக் கட்டுரையில் தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் குறிப்பிட்டுள்ள மேற்கோளுடன் இதனை முடிக்க விரும்புகிறோம். 

\”இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிவை.எம்.ஸீ.ஏ. அல்லது சர்வோதய போன்ற அமைப்புகளை ஒத்த வகையில் தன்னோடு இணைந்துள்ளவர்களின் வாழ்க்கையில் பண்பாடுசமூக வலுவூட்டல் என்பவற்றை மேம்படுத்தும் இலக்கோடு செயல்படுகிறது.

1954இல் நிறுவப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உயர் விழுமியங்கள்அமைதிசமாதானம்நல்லிணக்கம் என்பவற்றை ஊக்குவித்தல்வறுமையை ஒழித்தல் மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் முதலான நோக்கங்களுடன் செயல்படும் ஓர் அமைப்பாகும். இது போன்ற அமைப்புகள் இலங்கை சமுதாயத்தின் பிரதான நீரோட்டத்திலிருந்து பிரிக்க முடியாத ஓர் அங்கமாகும்.

 

சட்டத்தரணி பாரிஸ் ஸாலி LL.M (Staffordshire),

LL.B (Colombo), Attorney-at- Law

பொதுச் செயலாளர் மற்றும் சட்ட ஆலோசகர்

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

 

 


 

මාධ්‍ය නිවේදනය

 

පාස්කු ප්‍රහාර විමර්ශන කොමිසමේ චෝදනා පදනම් විරහිත හා අසත්‍ය ප්‍රකාශ යැයි ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධානය ප්‍රතික්‍ෂේප කරයි.

ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලිමි යනු අඩ සියවසකටත් පෙර එනම් 1954 වසරෙහි මෙරටෙහි ස්ථාපිත කරන ලද ඉස්ලාමීය සංවිධානයකි. වසර 1958 සැප්තැම්බර් 07 වන දින සම්පාදනය කරන ලද සංවිධානයේ ව්‍යවස්ථාවේ ඡේදය 1 (a) හි අවධාරණය කර ඇති පරිදි ශ්‍රී ලංකාවේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට අනුකුලව කටයුතු කරන මෙම සංවිධානය සිය සාමාජිකයන් හා සහයෝගය දක්වන්නන්ට සුබසාධන සේවා සපයයි.

මෙරටේ පවතින ප්‍රමුඛ මුස්ලිම් සිවිල් සංවිධානයක් වන ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි තහනම් කරන මෙන් පාස්කු කොමිසම විසින් සිදු කර ඇති නිර්දේශය නිසා සංවිධානය තම දැඩි කනස්සල්ල ප්‍රකාශකරයි. මෙසේ නිර්දේශකර ඇත්තේ අදාල චුදිත පාර්ශවකරුට නිදහසට කරුණු කීමේ අවස්ථාවද හිමි නොකර දෙමිනි. මෙය වනාහී ස්වාභාවික යුක්තියේ මුලික රීතියක් උල්ලංඝනය කිරීමකි. මෙම රීතිය වනාහි විමර්ශන කොමිසම් පනතේද අවධාරණය කර ඇති පැහැර හරිය නොහැකි නිර්දේශයක්ද වෙයි. එම පනතේ ඡේදය 16 හි පනතේ බලතල අනුව කොමිසම විසින් විමර්ශනය කරනු ලබන පාර්ශවකරුවන්ට එරෙහිව සිදු කරනු ලබන චෝදනා කිසිවක් වෙතොත් ඒ සඳහා කොමිසම ඉදිරියේ නිදහසට කරුණු ඉදිරිපත් කිරීමට එම පාර්ශවයන්ට අවස්ථාව ලබා දිය යුතුය යැයි පැහැදිලිවම සඳහන් කර ඇත. එනමුත් කිසිදු විටෙක කොමිසම ඉදිරියට පැමිණ කරුණු ඉදිරිපත් කරන මෙන් ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධානයට කොමිසම ඇරියුම් කළේ නැත.

‘මෙම කණ්ඩායම සන්තකයේ සැලකියයුතු සංඛ්‍යාවකින් ගිනි අවි තිබෙන අතර ප්‍රධාන වශයෙන් අවතැන් වු මුස්ලිම්වරුන් රඳවා ඇති අනාථ කඳවුරුවලින් තෝරා ගන්නා ලද තරුණයන් 150 කට පමණ (මෙම සංවිධිනය) පුහුණු ලබා දී ඇත’යැයි කොමිසමේ සඳහන් කර තිබීම වෙසෙසින් අපව දැඩි කම්පාවට ලක් කර ඇත. මෙය අමූලික හා අසත්‍ය චෝදනාවක් යැයි ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධනෙය තරයේ ප්‍රකාශ කර සිටියි. අපගේ මතය නම් මෙම අභූත චෝදනාව තහවුරු කිරීම පිණිස එවන් තොරතුරු ලැබුනු වහාම කොමිසමට අනුබද්ධ රහස් පොලිසියේ කණ්ඩායමක් අදාල අනාථ කඳවුරුවලට යවා එවැනි නීති විරෝධි ගිනි අවි තබා ගෙන සිටියවුන් එම අවිත් සමග අත් අඩංගුවට ගෙන ඉදිරිපත් කරන්නට තිබුනු බවයි. කොමිසම මෙසේ වගකීම් රහිත හා සනාථ කළ නොහැකි චෝදනා ඉදිරිපත් කිරීම නිසා කොමිසම විසින් ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධානයට හා එහි අනුබද්ධ ආයතනයක් වන ශ්‍රී ලංකා ඉස්ලාමීය ශිෂ්‍ය සංවිධානයට (SLSIM) එරෙහිව හා ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමියේ හිටපු සභාපති උස්තාද් හජ්ජුල් අක්බර් පිළිබඳව වාර්ථාවේ සඳහන් කරුණු අනෙකුත් කරුණුවල සත්‍යතාවයද ප්‍රශ්නාර්ථයක් කරයි.

එමෙන්ම ශ්‍රී ලංකා ඉස්ලාමීය ශිෂ්‍ය සංවිධානයේ එක්තරා සාමාජිකයෙකු සංවිධානයේ ව්‍යවස්ථාවට පටහැනිව හා සාමාජිකයන් අතර බෙදීමක් ඇති කළ හැකි ක්‍රියාකලාපයක නිරතවනු දැක ඔහුව වහා සංවිධානයෙන් නෙරපා දැමීමට කටයුතු කළ සිද්ධියට කොමිසම කිසිදු අගයක් ලබා නොදීමද අප සංවිධානය විමැතියට පත් කර ඇත. එසේ අප විසින් දූරදර්ශීව නෙරපා දමන ලද තැනැත්තා වසර කිහිපයකට පසුව මාවනැල්ලේ බුදු  පිළිම කැඩු සිද්ධිය සම්බන්ධව අත් අඩංගුවට පත් විය. එමෙන්ම බුදු පිළිම සිද්ධියට බොහෝ කලකට පෙරම ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධනයේ සාමාජිකයෙකුව සිටි ඔහුගේ පියාවද සමාන හේතුවක් නිසා එම සංවිධානයෙන් නෙරපන ලදි. එසේ නෙරපන ලද එම පුද්ගලයා එවකට ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධානයේ සභාපතිව සිටි උස්තාද් හජ්ජුල් අක්බර්ගේ සොහොයුරාය. එවන් සමීප නෑකමක් තිබෙන විටම එම පුද්ගලයා සහ බුදු පිළිමයට හානි ඇති කළ තරුණයාව සංවිධානයේ හා රටේ පවතින නීතියට පටහැනිව ක්‍රියා කළ නිසා නෙරපා දැමීමට ආදර්ශවත් ලෙසින් කටයුතු කළ සිද්ධිවලින්ම ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධානය කෙතරම් දුරට ජන කොටස් අතර සාමය ආරක්‍ෂා කිරීමට හා නීතිය අනුව ක්‍රියා කිරීමට මුල් තැනක් දෙන්නේද යන කාරනාව පැහැදිලිවම සනාථ වෙයි.

තරයේ හෙලා දැකිය යුතු බුදුපිළිමවලට හානි කිරීමේ සිද්ධිය සම්බන්ධයෙන් ඉස්ලාමීය සංවිධානයන් වශයෙන් පහත කුර්ආන් වැකිය උපුටා දැක්වීමට කමෙත්තෙමු. ඔවුන් අදහන අල්ලාහ් නොවන දැයට ඔබ අපහාස නොකරන්න… (6:108) යැයි කුර්ආනය අවධාරණය කරයි. ඒ අනුව බුදි පිළිමයට හානි කළ සිද්ධිය මෙන්ම 2019 අප්‍රේල් පාස්කු දින ත්‍රස්ත ප්‍රහාර මාලාවද ඉස්ලාම් විරෝධී අමානුෂික හා මිලේච්ඡ ක්‍රියා ලෙසින් තරයේ හෙළා දකිමින් ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධානය වහාම ප්‍රකාශ නිකුත් කළේය. මේ සියලු කරුණු සහිතව උක්ත අමුලික චෝදනාවලට එරෙහිව වඩාත් විස්තරාත්මක ප්‍රතිචාරයක් ඉදිරිපත් කිරීමට අප බලාපොරොත්තු වෙමු.

අවසාන වශයෙන් 2021 මාර්තු 23 වන දින The Island ඉංග්‍රිසි පුවත් පතේ ශ්‍රී ලංකා ජාතික සාම මණ්ඩලයේ ප්‍රධානියා විසින් සිදු කර තිබු අදහස් දැක්වීමක් උපුටා දක්වන්නට අප සිතමු. ‘අන්තවාදයට එරෙහිව රජය දියත් කර ඇති පියවර නිෂ්ඵල විය හැකිය’ යන මැයෙන් යුත් එම ලිපියෙහි මෙසේ සඳහන් වෙයි.

ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධනය ස්ථාපිත වී ඇත්තේ තරුණ ක්‍රිස්තියානි සංගමයසර්වෝදය වැනි ව්‍යාපාරවලට සමගාමීව හා සිය සාමාජිකයන්ගේ ජීවන තත්වය උසස් කිරීම හා ඔවුන්ගේ සදාචාර උන්නතිය වැනි සමාන සමාජ මෙහෙවර උදෙසාය. 1954 වසරෙහි පිහිටුවන ලද ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමී සංවිධානය එවක පටන්  සාමය හා එකමුතු බව වැනි සමාජ අගයන් ප්‍රවර්ධනය කිරීම දරිද්‍රබව තුරන් කිරීම පරිසරය සංරක්‍ෂණය කිරීම වැනි උසස් ඉලක්ක වෙනුවෙන් දායක වී ඇත. ලාංකික ජනසමාජයේ ප්‍රධාන ප්‍රවාහයේ අගංයක් වන මෙවන් සංවිධාන ආන්තික තත්වයන්ට තල්ලු නොකළ යුතුය.

 

නීතිඥ ෆාරිස් සාලි LL.M (Staffordshire), LL.B (Colombo),

Attorney-at- Law

මහ ලේකම් සහ නීති උපදේෂක

ශ්‍රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි

 


 

Media Release

 

Sri Lanka Jama’athe Islami rejects Easter Sunday Commission’s allegations as baseless and unfounded

The Sri Lanka Jama’athe Islami (SLJI), is a religious organization founded in 1954 for providing welfare services to the members and well-wishers in conformity with the Constitution of the country as provided in Clause 1(a) of the SLJI Constitution adopted on 7th September 1958.

The SLJI is deeply distressed by the report of the Commission of Inquiry on the Easter Sunday attacks calling for the banning of this pre-eminent Muslim civil society, without giving the SLJI as an organization, the right to be heard and in violation of the principles of natural justice. It is sad to note that the Commission had not acted in conformity with section 16 of the Commissions of Inquiry Act which requires parties ‘whose conduct is the subject of inquiry under the Act or in any manner implicated or concerned in the matter under inquiry’ to be represented and heard. SLJI had never been noticed to appear before the Commission.

In a shocking reference to the SLJI, the report states that “this group possesses a considerable number of firearms and provided training for approximately 150 youths mainly selected from Muslim internally displaced camps”. Surely the Commission could have sent a team from the CID unit attached to it, seized the firearms and produced the persons who were in possession of the offensive weapons in proof of this frivolous allegation. The SLJI rejects this baseless and unfounded allegation as absolutely false. This type of findings brings into serious question the credibility of the other expressions of the Commission made against the SLJI and the Sri Lanka Islamic Students Movement (SLISM), an independent organization affiliated to the SLJI and one time leader of the SLJI, Ustaz Hajjul Akbar.

The SLJI is surprised that the Commission had not given due weightage to the expulsion from the SLISM of one of its members for creating disharmony among the members in violation of the SLISM constitution and who was arrested years later allegedly in connection with the damaging of the Buddha statue in Mawanella. His father who was a member of the SLJI was also expelled for similar reasons, from the SLJI membership, well before the Buddha statues being vandalized. The expulsions from the SLJI done in consultation with the then President Ustaz Hajjul Akbar, of the father who was his own brother, and from the SLISM of the brother’s son for conduct unbecoming of the high standards of conduct required under the Constitutions of the organizations and the country are the best evidence of the exemplary role of the SLJI and its then President as well as the SLISM.

In retrospect to the reprehensible incident of vandalizing the Buddha statues, the SLJI as an Islamic organization wishes to draw attention to the Quranic verse at Sura 6 Verse 108 “Do not revile the idols they have joined with Allah….”. Truly, Islam clearly prohibits vandalizing statues which are objects others worship.

The SLJI had condemned the vandalizing incidents in December 2018 and the Easter attacks of 21st April 2019 unreservedly as un-Islamic, inhuman and barbaric. We hope to release a more detailed response against the unsubstantiated allegations very soon.

We wish to conclude with a quote from the head of the National Peace Council as published in the ‘Island’ daily of 23rd March 2021 under the title ‘Govt. initiatives to counter extremism can become counterproductive’: Jama\’athe Islami is organized on lines such as the YMCA or Sarvodaya and with a similar social mission of uplifting the lives of those who are its members, both in terms of morality and social empowerment. It was established in 1954 and works on promoting values, peace and harmony, alleviating poverty and protecting the environment. Organizations such as this are part of the mainstream of Sri Lankan society and should not be driven to the margins”.

 

Faris Saly LL.M (Staffordshire), LL.B (Colombo),

Attorney-at- Law

General Secretary & Legal Consultant

Sri Lanka Jama\’athe Islami

 

 

\"\"

\"\"

\"\"

\"\"

 

\"\"\"\"

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top