74வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
எமது தேசத்தின் 74வது சுதந்திரத்தைக் கொண்டாடும் இந்த தினத்தில் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று எமது தேசத்தின் விடுதலைக்காகவும் அதன் உண்மையான அபிவிருத்திக்காகவும் போராடிய எமது தேசிய வீரர்களை நினைவு கூறு வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும்.
சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் சுதந்திரத்தினூடாக நாம் பெற்றுக் கொண்ட தேசியத்தையும், ஜனநாயகத்தையும் எமது நாட்டு அனைத்து பிரஜைகளும் அனுபவிப்பதற்கு தடையாக இருக்கின்ற அனைத்து விதமான உள், வெளி காரணிகள் அனைத்தையும் ஒன்றிணைந்து வெற்றி கொள்வதற்கு உறுதிபூணுவோம்.
எமது தாய் நாடு சமூக, பொருளாதார ரீதியாக ஒரு தீர்க்கமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் நாம் 74வது சுதந்திர தினத்தை எதிர் கொண்டுள்ளோம். கடந்த காலங்களில் தேசம் தொடர்பாக நாம் விட்ட தவறுகளையும், பிழைகளையும் மீட்டிப்பார்த்து மீண்டும் அவற்றை விடாதிருப்பதற்கு திடசங்கற்பம் பூணுவோம்.
\’எமது நாட்டின் வெற்றியும் தோல்வியும் நாட்டு மக்களாகிய எம்மையே சாரும்\’ என்பதை ஏற்றுக்கொள்வதோடு எமது முன்னோர்கள் வாழ்ந்த, நாம் இப்போது வாழுகின்ற, எமது சந்ததிகள் வாழ இருக்கின்ற எமது தேசத்தை அனைத்து வழிகளிலும் முன்னேற்றத்தின் பால் இட்டுச்செல்வதற்காக ஒன்றிணைவோம், பிரார்த்திப்போம், செயற்படுவோம்!
அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி
தலைவர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
74 වෙනි නිදහස් දින සුභ පැතුම් පිණිවුඩය.
අප දේශයේ 74 වෙනි නිදහස සමරන මෙම දිනයේ ජාති, ආගම්, භාෂා හා ප්රදේශීය වෙනස්කම් වලින් තොරව අප රටේ නිදහස් අරගලය වෙනුවෙන් සහ එහි සැබෑ සංවර්ධනය වෙනුවෙන් සටන් කළ ජාතික වීරයින් සිහිපත් කිරීම අප සැමගේ යුතුකමයි.
නිදහස් උත්සවය පවත්වන මෙම අවස්ථාවේ නිදහස මගින් අප ලබාගත් ජාතිකත්වය හා ප්රජාතන්ත්රවාදී ජීවන ක්රම අප රටේ සෑම පුරවැසියෙක්ම භුක්ති විදීමට බාධාවන සියළු අභ්යන්තර හා බාහිර සාදක එකමුතුවෙන් ජය ගැනීමට අධිෂ්ඨානය කර ගනිමු.
අප මාතෘභූමිය සමාජ හා ආර්ථික වශයෙන් තීරණාත්මක අවධියක පසුවන අවස්ථාවේ අපි නිදහස් දිනය සමරන්නෙමු. දේශය සම්බන්ධයෙන් අපෙන් සිදුවූ අතීතයේ අඩුපාඩු හා වැරදි ඇත්නම් ඒවා නැවතත් නොකිරීමට වග බලා ගනිමු.
“අප රටේ ජය සහ පරාජය ඇත්තේ පුරවැසියන් වන අප අතේය.” යන්න පිළිගෙන අපගේ මුතුන්මිත්තන් ජීවත්වූ, අප දැනට ජීවත්වන සහ අනාගතයේ අපගේ දූ දරුවන් ජීවත් වීමට ඇති අපගේ දේශය සියළු අංශවලින් අභිවෘද්ධිය කරා ගෙනයාමට එකමුතුවෙමු. ප්රාර්ථනා කරමු. ක්රියාත්මක වෙමු.
අෂ්ශෙයික් එම්.එච්.එම්. උසෛර් ඉස්ලාහි
සභාපති,
ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි.