ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
இன்னுமொரு புனித ரமழான் அருள்கள் அனைத்தையும் அள்ளித்தந்து விட்டு எம்மிடமிருந்து விடை பெறும் தருணம் இது.
தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற வகையில் சுய கட்டுப்பாட்டுடனும் இறையுணர்வுடனும் வாழ்வதற்கான பயிற்சியையும் அல்லாஹ்வுடனான நெருக்கத்தையும் ரமழான் எங்களுக்குப் பெற்றுத் தந்தது.
அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் வகையில் பசியையும் தாகத்தையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டு, அவனது அன்பையும் திருப்தியையும் எதிர்பார்த்து புலன்களை அடக்கி இரவும் பகலும் இறை வணக்கத்தில் ஈடுபாடு கொள்ளும் ஒரு சிறப்பான ஆன்மீகப் பயற்சியையும் ரமழான் வழங்கியது.
ஏழைகளின் பசியை அனுபவித்து உணர்ந்து வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனித நேய மனப்பாங்கையும் இம்மாதம் எமக்கு வழங்கியது.
அப்படியிருக்க எமது நாடு பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையிலும் கொந்தளிப்பான அரசியல் சூழலிலும் சிக்கியிருப்பதை நாம் நன்கறிவோம்.
பொருட்களின் விலையுயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறை, வெளிநாட்டுக் கடன்களை செலுத்த இயலாமை போன்ற பல நெருக்கடிகளால் சர்வதேச, பிராந்திய மட்டத்தில் பல் கட்டுமான அழுத்தத்தில் நமது நாடு அல்லல் படும்வேளை இது.
நாட்டில் புறையோடிப்போயிருக்கும் ஊழலும் அநீதியும் வகுப்பு வாதம் போன்றவைதான் இந்த இழி நிலைக்கு காரணமென பக்கச் சார்பற்ற இளைஞர்கள், மற்றும் புத்திஜீவிகள் புத்தாக்க அரசியல் கலாசாரத்தை வேண்டி தொடர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் அனைவரும் பல இன்னல்களை சந்தித்து வரும் இவ்வேளையில் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் நாம் தேவையுடையவர்களுக்கு உதவி செய்வதிலும் நாட்டின் சுபீட்சத்திற்காக இறைவனிடம் பிரார்த்திப்பதிலும் அதிகம் ஈடுபடக் கடமைப்பட்டுள்ளோம்.
நடைபெறும் போராட்டம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்ல பயனை வழங்க வேண்டும் எனவும் பிரார்த்திப்போம்.
மேலும் வாழ்வில் சிக்கனத்தை கடைபிடித்து, மிகை நுகர்வை குறைத்துக் கொள்ளவும் முடியுமானளவு பயிர்ச்செய்கை மற்றும் உற்பத்திப் பணிகளில் ஈடுபடவும் நாம் தீர்மானிக்க வேண்டும்.
அனைவருக்கும் இறையருள் கிடைக்கும் ஒரு ஈகைத் திருநாளாக இந்த ஈதுல் பித்ர் பெருநாள் அமைய வோண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
—
அஷ் ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி
தலைவர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
*******************************************************************************************
රමසාන් අවුරුදු සුබ පැතුම්
සියලු දායාදයන්ගෙන් අපව පෝෂණය කළ තවත් රමසාන් මාසයක අවසානයේ පසුවෙන කාලයයි මෙය.
පුද්ගලයා, පවුල, සමාජය ආදී වශයෙන් සියළු දෙනා ස්වයම් පාලනයකින් හා බියබැතියෙන් යුතුව ජීවත්වීමේ පුහුණුව හා අල්ලාහ් දෙවිඳුන් සමග වූ සම්පතාවය ද මේ රමසාන් උපවාසය අපට ලබාදුන්නේය.
අල්ලාහ් දෙවිඳුන්ගේ අණට කීකරු වීමක් වශයෙන් කුසගින්න හා පිපාසය ඉවසීමෙන් යුතුව පිළඇරගෙන ඔහුගේ දයාව සහ තෘප්තිය අපෙක්ෂාවෙන් පංඡේන්ද්රියයන් පාලනය කරමින් දිවා රාත්රි නොබලා නැමදුම් කාර්යයෙහි යෙදී සිටි සුවිශේෂ කාලපරිච්ඡේදයක් රමසාන් මාසය අපට ලබාදුන්නේය.
දුප්පතුන්ගේ කුසගින්න අත්විඳිමින් ජීවිතයේ සෑම අවස්ථාවකම පාහේ ඔවුනට උදව් කළ යුතුය, යන මානුෂීය ආකල්පය රමසාන් මාසය අප තුළ වර්ධනය කලේය.
එමෙන්ම අප රට ආර්ථික වශයෙන් දුර්වල තත්වයට පත්වී දේශපාලන වශයෙන් කැලඹිලි තත්වයක පවතින බව අපි දනිමු.
භාණ්ඩ මිල අසාමාන්ය ලෙස ඉහල යෑම, අත්යාවශ්ය භාණ්ඩ හිඟය, ගෙවුම් ශේෂ ගැටළු, විදේශ ණය ගෙවීමේ අපහසුතා, වැනි බොහෝ අර්බුධකාරී තත්වයන් නිසා ජාත්යන්තර වශයෙන් හා කලාපීය වශයෙන් විවිධ දුෂ්කරතාවයන්ට ද අපගේ මව්රට පත්වී ඇති වකවානුවක අප ජීවත්වෙමු.
ඉහවහාගිය, දූෂණය, නිතියේ ආදිපත්යය බිඳවැටීම, ජාතිවාදය වැනි බොහෝ කරුණු මෙම තත්වය සඳහා සාධකවී ඇති බව පවසමින් නිර්පාක්ෂික තරුණ පිරිසක් සහ බුද්ධිමතුන් නව දේශපාලන සංස්කෘතියක් පතමින් අඛණ්ඩ අරගලයක යෙදී සිටිති.
අපගේ රට වැසියන් බොහෝ දුෂ්කරතාවලට මුහුණපා ඇති කාලපරිච්ඡේදයක පරිත්යාගයේ අවුරුද්ද සමරන අපි අවශ්යතා ඇති අයට පිහිටවීමෙහි හා රටේ සැබෑ සෞභාග්යය වෙනුවෙන් දෙවිඳුන්ගෙන් ප්රාර්ථනා කිරීමෙහි වැඩි වැඩියෙන් නිරතවිය යුතුය.
පැවත්වෙන ජන අරගලය රටට හා සමාජයට යහපත් ප්රතිඵලයක් ලබාදීම වෙනුවෙන් දෙවිඳුන්ගෙන් ප්රාර්ථනා කරමු.
තවද දෛනික ජීවිතයේ අරපිරිමැස්ම අනුගමනය කරමින් අධි පරිභෝජනය අවම කරමින් හැකි සෑම ආකාරයෙන්ම බෝග වගා කටයුතුවල හා නිෂ්පාදන කටයුතුවල යෙදීමේ තීරණයකට ද අප එළඹ යුතුව ඇත.
සියළු දෙනාටම දේවාශිර්වාදය ලැබෙන ඊදුල් ෆිත්ර් අවුරුද්දක් වේවායි දෙවිඳුන්ගෙන් ප්රාර්ථනා කරමි.
සියළු දෙනාටම ඊද් සුබ පැතුම් එකතු කරමි.
—
අෂ්ෂෙයික් එම්.එච්.එම්. උසෛර් (ඉස්ලාහි)
සභාපති,
ශ්රි ලංකා ජමාඅතේ ඉස්ලාමි