அஷ்-ஷைக் ஏ.எல்.எம். இப்ராஹீம் கபூரி (اللهم اغفر له وارحمه) அவர்களின் மறைவையொட்டி ஜம்இய்யா விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2024/312

2024.03.30 (1445.09.19)

இலங்கையின் மூத்த மார்க்க அறிஞர்களுள் ஒருவரும் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவருமான அஷ்-ஷைக் ஏ.எல்.எம்.இப்ராஹீம் (கபூரி) (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் சனிக்கிழமை 2024.03.30ஆம் திகதி அதிகாலை வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் நீண்ட காலம் தஃவாப் பணியில் ஈடுபட்டிருந்ததோடு ஜாமியா நளீமியா, இஸ்லாஹியா, தன்வீர் அகடமி, ஆயிஷா சித்தீக்கா மகளிர் அரபுக்கல்லூரி போன்ற இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் உருவாக்கத்திலும் முக்கிய பங்களிப்புக்களையாற்றியுள்ளார்கள். அத்தோடு அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பிலும் இவர்கள் பிரதான பங்குவகித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அஷ்-ஷைக் இப்ராஹீம் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிலும் நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் உபதலைவராகவும் பதவி வகித்து இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு சேவை புரிந்திருக்கிறார்கள்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!

أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله

\”(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக!)\”

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top