Ussair Islahi re-elected as president of SLJI
Ash Sheikh M.H.M. Ussair Islahi has been re-elected for a second term as the president of the Sri Lanka jama\’athe Islami, at the 68th year National Convention of the organization held on 31st of July, 2022.
The convention was held in hybrid mode where around one thousand members gathered at around 30 designated centres and were virtually connected using Zoom technology.
According to the constitution of the organization the president in elected once in four years.
Several dignitaries from deferent ethnic communities and three past presidents of the organization also shared their enlightening thoughts with the participants.
The newly elected President thanked all those who supported the organization during its difficult times and assured members his determination to discharge the responsibilities shouldered on him to the best of his abilities.
Media Unit
Sri Lanka jama\’athe islami
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக அஷ் ஷெய்க் உஸைர் இஸ்லாஹி மீண்டும் தெரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக அஷ் ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி அவர்கள் இரண்டாவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜமாஅத்தின் 68 ஆவது வருட அங்கத்தவர் தேசிய மாநாட்டின் போதே இத் தெரிவு இடம்பெற்றது.
ஜமாஅத்தே இஸ்லாமியின் அமைப்புச் சட்ட விதிகளுக்கு அமைய நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தலைவர் (அமீர்) தேர்தல் இம்மாநாட்டின் பிரதான அம்சமாக அமைந்திருந்தது.
ஜமாஅத்தே இஸ்லாமி அங்கத்தவர்கள் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 30 நிலையங்களில் ஒன்று கூடி zoom தொழில்நுட்பத்தின் ஊடாக தலைமையகக் காரியாலயத்தோடு இணைக்கப்பட்டு தலைவர் தேர்தலில் தமது வாக்குகளை பதிவு செய்தனர். நேரடியாக கலந்துகொள்ள முடியாத அங்கத்தவர்கள் தனியாக இணையத்தின் மூலமாக வாக்களித்தனர்.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அடுத்து வரும் நான்கு வருடங்களுக்கான இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக அஷ் ஷெய்க் எம்.எச்.எம் உஸைர் இஸ்லாஹி அவர்கள் இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இதன்போது, கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகளின் போது ஜமாஅத்தே இஸ்லாமியின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தலைவர் நன்றி தெரிவித்ததோடு, இன்றுள்ள சவால்களுக்கு மத்தியிலும் ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சீர்த்திருத்த மற்றும் மனித நேயப் பணிகளை முன்னெடுப்பதற்கு தன்னால் முடியுமான அனைத்து வழிகளிலும் முயற்சிப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.
மாநாட்டில், பல்லின சமூகங்களையும் சேர்ந்த புத்திஜீவிகளும் சமூகத் தலைவர்களும் இணைந்து தமது கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමිය සංවිධානයේ නායකත්වයට නැවතත් උසෛර් (ඉස්ලාහි) මහතා.
ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධානයේ නායකත්වයට අෂ්ෂෙයික් එම්.එච්.එම් උසෛර් (ඉස්ලාහි) මහතා නැවතත් තෝරාපත්ව ඇත. 2022.07.31 වෙනි දින (ඉරිදා) පවත්වන ලද ජමාඅතේ ඉස්ලාමියේ 68 වෙනි සාමාජික ජාතික සම්මේලනයේදී, මෙසේ තෝරාපත් විය.
ජමාඅතේ ඉස්ලාමියේ ව්යවස්ථාවට අනුව වසර හතරකට වරක් පවත්වන සභාපති තේරීමේ ඡන්ද විමසීම මෙම සම්මේලනයේ ප්රධාන අංගය විය.
ජමාඅතේ ඉස්ලාමියේ, සාමාජිකයින් දිවයිනේ විවිධ ප්රදේශවල ස්ථාපිත කර තිබූ, මධ්යස්ථාන 30 ක රැස්වී zoom තාක්ෂණය ඔස්සේ ප්රධාන කාර්යාලය සමග සම්බන්ධ වී සභාපති වරණයේදී තම ඡන්දය භාවිත කලහ. රැස්වීමට සහභාගිවීමට අපොහසත් සාමාජිකයෝ අන්තර්ජාල හරහා තම ඡන්දය භාවිත කලහ. ඡන්දප්රතිපල අනුව ඊලඟ වසර හතර සඳහා ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමියේ ජාතික සභාපති වශයෙන් අෂ්ෂෙයික් එම්.එච්.එම් උසෛර් (ඉස්ලාහි) මහතා දෙවන වරටත් තෝරාපත්විය.
ඉකුත් වසරවල අර්බුද අවස්ථාවලදී ජමාඅතේ ඉස්ලාමිය කෙරෙහි විශ්වාසය තබා සහයෝගය දැක්වූ සැමට සභාපතිවරයා ස්තුතිය පුදකල අතර වර්තමාන අභියෝග මධ්යයේ වුවද ජමාඅතයේ සමාජ ප්රතිසංස්කරන හා මානුෂීය මෙහෙවර ඉදිරියට ගෙනයාමට තමන්ට හැකි සෑම අයුරෙන්ම ප්රයත්න දරන බවත් සභාපතිතුමා පොරොන්දුවූයේය.
විවිධ ජාතීන්ට අයත් විද්වතුන් ප්රජානායකයින් අදහස් දැක්වීම හා සුභාශිංසන කිරීම සම්මේලනයේ කැපීපෙනෙන අංගයක් විය.
මාධ්ය අංශය,
ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමිය.