“மரம் வளர்ப்போம்; மனிதம் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி “ரம்ய லங்கா” அமைப்புடன் இணைந்து நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுவரும் # விழிப்புணர்வு கருத்தரங்குகள், # மரம் நடுகை நிகழ்வுகள், # மர விநியோக நிகழ்வுகள் போன்றவற்றின் தொடரில் மற்றுமோர் நிகழ்வு சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டும் 10.10.2018 அன்று அங்கொடை மனநல வைத்தியசாலையில் நடைபெற்றது. ரம்ய லங்காவின் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். பாரிஸ் சாலியினால் மரம் நடுகை செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் சக்கரநாற்காலிகள் மற்றும் நாளாந்த பாவனைக்கான பொருட்களடங்கிய பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊழியர்கள், ரம்ய லங்கா நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்