Introduction
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி : ஓர் அறிமுகம்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி 1954 ம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி கேகாலை மாவட்டம் தெஹியோவிட எனும் கிராமத்தில் 12 பேர்களுடன் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சமய, சமூக அமைப்பாகும்.
பெயர்
இவ்வமைப்பின் பெயர் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி என்பதாகும். இது ஆங்கிலத்தில் Sri Lanka Jama’athe Islami என்றும், சிங்களத்தில் ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි என்றும் அழைக்கப்படும். அவ்வாறே இது ஆங்கிலத்தில் Sri Lanka Islamic Association எனவும் சிங்களத்தில் ශ්රී ලංකා ඉස්ලාමිය සංවිධානය எனவும் அழைக்கப்படலாம்.
இலட்சியம்
- “தீனை நிலை நிறுத்துங்கள்; அதில் பல பிரிவுகளாகப் பிரிந்து விடாதீர்கள்” எனும் அல்குர்ஆனின் கட்டளையை நிறைவேற்ற முயற்சித்தல்.
- வாழ்வின் சகல அம்சங்களையும் இஸ்லாத்தின் போதனைப் பிரகாரம் மீளமைத்தல்.
- அன்பு, சகோதரத்துவம், பரஸ்பர உறவு, மனித நேயம் போன்ற உயரிய விழுமியங்களை மேம்படுத்தல்.
- நாட்டின் முன்னேற்றம், அபிவிருத்தி என்பவற்றில் பங்களிப்பு வழங்குதல்.
செயல்முறை
- இஸ்லாத்தை கற்க ஊக்கமளித்தல், உதவுதல்.
- இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதல்களை முன் வைத்தல்.
- இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த முஸ்லிம்களுக்கு வழிகாட்டல்களை வழங்குதல்.
- இஸ்லாத்தை “சமயம்” எனும் சொல்லால் கருதப்படும் குறுகிய பொருளிலன்றி, எல்லாக் காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் அனைத்துலக மக்களுக்குமுரிய வாழ்க்கைத் திட்டம் என்ற வகையில், தம் வாழ்வின் சகல துறைகளையும் இஸ்லாமிய வழியில் அமைத்து வாழ விரும்பும் தனி மனிதர்களையும் அத்தகையவர்களைக் கொண்ட இஸ்லாமியக் குடும்பங்களையும் இஸ்லாமிய சமூக சூழலையும் உருவாக்குதல்.
- பொதுவாக இலங்கை பிரஜைகளுக்கு குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கும் பயனளிக்கக்கூடிய சமூகநலத் திட்டங்களை முன்னெடுத்தல்.
- சமூகங்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லெண்ணத்தையும் வளர்க்க உதவும் செயற்திட்டங்களை முன்னெடுத்தல்.
- மனித நலன்கள், மனித உரிமைகள் முதலானவற்றை உறுதிப்படுத்துவதில் பங்களிப்பை வழங்குதல்.
- இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் பணியில் பங்களிப்பை வழங்குதல்.
- நாட்டின் அபிவிருத்திக்கும் அமைதிக்குமான செயற்திட்டங்களில் பங்களிப்புச் செய்தல்.
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள “இலட்சியங்களை” அடைந்து கொள்வதற்குத் தேவையான அல்லது அதற்கு வலுச்சேர்க்கின்ற பொருத்தமான ஏனைய செயல்முறைகளை மேற்கொள்ளல்
வழிகாட்டல் தத்துவங்கள்
- ஜமாஅத்தே இஸ்லாமியின் அகீதா (கொள்கை) வும் அமல் (செயற்பாடு) களும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா என்பவற்றின் அடிப்படையிலும் அவை இரண்டுக்கும் ‘அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ’ வழங்கும் விளக்கத்தின் அடிப்படையிலும் அமையும்.
- ஜமாஅத்தே இஸ்லாமியின் சகல செயற்பாடுகளும் இஸ்லாத்தின் நடுநிலைக் கோட்பாட்டைப் பேணியதாக இருக்கும்.
- இஸ்லாம் வலியுறுத்துகின்ற மானுட விழுமியங்களை ஜமாஅத்தே இஸ்லாமி முழுமையாகப் பேணி நடக்கும்.
- ஜமாஅத்தே இஸ்லாமி என்ற பெயரில் அல்லது வேறு பெயர்களில் உள்நாட்டிலோ வெளிநாடுகளிலோ இயங்கும் எந்த இயக்கத்துடனும் ஜமாஅத்தே இஸ்லாமி எவ்விதக் கட்டுப்பாட்டுடன் கூடிய தொடர்பையும் கொண்டிராது. ஜமாஅத்தே இஸ்லாமி சுதந்திரமாக இயங்கும்.
- ஜமாஅத்தே இஸ்லாமி தனது செயற்பாடுகளில் சாத்விகமான; சட்டபூர்வமான வழிமுறைகளையே கையாளும்.
- ஜமாஅத்தே இஸ்லாமி கட்சி அரசியலுக்கு அப்பாலிருந்தே செயற்படும்.
அமைப்பின் தலைவர்கள்
- ஜனாப் A.C. ஜெய்லானி சாஹிப் (1954 – 1957)
- மௌலவி M.U. தாசிம் நத்வி (1957 – 1958)
- ஜனாப் செய்யித் முஹம்மத் (1958 – 1959)
- ஜனாப் P.M.M. யூசுப் (1959 – 1976 & 1977 – 1980)
- மௌலவி A.L.M. இப்ராஹிம் (1976 – 1977, 1980 – 1981 & 1982 – 1994)
- சட்டத்தரணி M.K.M. மஃசூம் (1981 – 1982)
- உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் (1994 – 2018)
- அஷ் ஷெய்க் M.H.M. உஸைர் இஸ்லாஹி (2018 – Present)
இவர்களில் முதல் நான்கு தலைவர்களும் காலமாகி விட்டார்கள். அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னித்து பிர்தவ்ஸ் எனும் சுவன பாக்கியத்தை அவர்களுக்கு வழங்குவானாக!
அமைப்பின் செயற்பாடுகள்
- இஸ்லாத்தை போதித்தல்
- ஆன்மீகத்தை மேம்படுத்தல்
- சமூக நலப் பணிகளில் ஈடுபடுதல்
- கல்விக்காக ஒத்துழைத்தல்
- சமூக ஒற்றுமையைப் பாதுகாத்தல்
- பிற சமூகங்களோடு புரிந்துணர்வை வளர்த்தல்
- இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்தல்
- ஊடக முயற்சிகளை முன்னெடுத்தல்
- கலை இலக்கியத் துறையில் ஈடுபாடு கொள்ளல்
- சமூக நீரோட்டத்தில் பெண்களை பங்கெடுக்க வைத்தல்
- சிறுவர் கல்வி மற்றும் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குடும்ப வாழ்க்கை போன்றவற்றை மேம்படுத்தல்
Extensive Grassroot Network
1
Districts
1
Branches